உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் இருந்து இயக்கப்படும் ரெயிலை சேலத்தில் இருந்து இயக்க வேண்டும் பாராளுமன்றத்தில் எம்.பி. வலியுறுத்தல்

Published On 2023-08-09 10:03 GMT   |   Update On 2023-08-09 10:03 GMT
  • சேலம் மற்றும் சேலத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் தொழில் நகரங்களான ஈரோடு திருப்பூர் தொழில் மற்றும் மருத்துவ நகரமான கோவைக்கு சென்று வந்து கொண்டுள்ளனர்.
  • காலை பணிக்குச் செல்லும் நேரத்திலும், மாலை பணி முடிந்து திரும்பும் நேரத்திலும் எந்த ஒரு வண்டியும் இயக்கப்படாததால் மேற்குறிப்பிட்ட அனைத்து பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

சேலம்:

சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி பாராளுமன்றத்தில் பேசியதாவது:-

ரெயில் சேைவ

சேலம் மற்றும் சேலத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தினமும் பல நூற்றுக்கணக்கான பயணிகள் தொழில் நகரங்களான ஈரோடு திருப்பூர் தொழில் மற்றும் மருத்துவ நகரமான கோவைக்கு சென்று வந்து கொண்டுள்ளனர்.

இதில் கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், தொழில் முனைவோர், தனியார் துறை பணியாளர்கள், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு செல்வோர், குறிப்பாக தினக்கூலி பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என அனைவரும் உள்ளனர்

இந்நிலையில், சேலத்திலிருந்துஅதிகாலை 5.22 மணிக்கு வண்டி எண் 13351 ஆலப்புழா எக்ஸ்பிரசிற்கு பிறகு 9.45 மணிக்கு வண்டி எண் 12626 கேரளா எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இடைப்பட்ட சுமார் 4 மணி 30 நிமிடங்களுக்கு எந்த வண்டியும் இயக்கப்படுவதில்லை.கோவையிலிருந்து மாலை 4.25 மணிக்கு 17229 சபரி எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 8 மணிக்கு 16382 புனே எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப் படுகிறது. இடைப்பட்ட சுமார் 4 மணி நேரத்திற்கு எந்த வண்டியும் இயக்கப்படுவதில்லை.

பாதிப்பு

இதனால், காலை பணிக்குச் செல்லும் நேரத்திலும், மாலை பணி முடிந்து திரும்பும் நேரத்திலும் எந்த ஒரு வண்டியும் இயக்கப்படாததால் மேற்குறிப்பிட்ட அனைத்து பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலையில் அவர்களின் வருமானத்தில் பெரும் பகுதி பேருந்து பயணச்செலவிற்கே செலவிட வேண்டி இருப்பதால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

ஆகவே, ஈரோட்டில் இருந்து கோவைக்கு காலை 7.50 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06801-யை சேலத்தில் இருந்து காலை சுமார் 7 மணி அளவில் புறப்படுமாறும், மறுமார்கமாக, கோவையி லிருந்து மாலை 6.10 மணிக்கு ஈரோட்டிற்கு புறப்படும் வண்டி எண் 06800-யை சேலம் வரை நீட்டித்து இயக்க பரிந்துரைத்து, அதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News