சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீ குளிக்க முயற்சி
- கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.
- வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சேலம்:
சேலம் மாவட்டம் சின்ன வீராணம் பகுதியை சேர்ந்த வர் சின்னப்பொண்ணு(50), இவரது மகன் லோகேஷ் (18) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.
பின்னர் சின்ன பொண்ணு மறைத்து வைத்து கொண்டு வந்த மண் எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சின்ன பொண்ணு கூறுகையில், எனது கணவர் ராஜேந்திரன் பெயரில் 2 3/4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு எனது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.
பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஓருவர் 2 3/4 ஏக்கர் நிலத்தில் 1 3/4 சென்ட் நிலத்தை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தார்.எங்கு சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டுகிறார்.
இது குறித்து வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
எனவே மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களிடமிருந்து ஏமாற்றி ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரி வித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.