சேலம் உழவர் சந்தைகளில் தக்காளி ரூ.35-க்கு விற்பனை
- தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையானது.
- தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது.
சேலம்:
சேலம் உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்களுக்கு வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் வரை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்ததால் மார்க்கெட்க ளுக்கு தக்காளி வரத்து அடியோடு சரிந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து அதிக பட்சமாக கடந்த வாரம் ஒரு கிலோ 160 ரூபாய் வரை விற்பனையா னது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளி வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் சேலம் மார்க்கெட்கள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்போது விலை படிப்படியாக சரிந்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் இன்று தக்காளி ஒரு கிலோ 35 முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்க ளில் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையானது.
இதனால் பொதுமக்கள் தக்காளியை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். இனி வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.