கொல்லப்பட்டி தொழிலாளி கொலையில் ரவுடி உள்பட 2 பேர் கைது
- மர்ம நபர்கள் கொடூரமாக ெகாலை செய்துள்ளது என்பது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசார ணையை தொடங்கினர்.
சேலம்:
சேலம் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் அருள். இவர் கோரிமேட்டில் இருந்து கன்னங்குறிச்சி செல்லும் பாதையில் மரம் அறுக்கும் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் மில்லில் விளக்கு போடுவதற்காக அருள் அங்கு வந்தார்.
இந்த நிலையில் செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரஞ்சித்குமார் (வயது 45) தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அங்கு பிண மாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அருள் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் ரஞ்சித்குமார் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து கோரிமேடு பகுதியில் வசித்து வந்துள்ளார். அவரை மர்ம நபர்கள் கொடூரமாக ெகாலை செய்துள்ளது என்பது தெரியவந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசார ணையை தொடங்கினர்.
விசாரணையில் ரஞ்சித்குமார், அவரது நண்பர் கொல்லப்பட்டியை சேர்ந்த கோகுல்நாத் (30), கோபிநாதன் ( 33) ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதும்அ வர்கள் தான் ரஞ்சித்குமாரை கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறை வான 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கோகுல்நாத் மாமியார் ரஞ்சித்குமாரிடம் பணம் வாங்கியதாக கூறப் படுகிறது. அந்த பணத்தை கோகுல் நாத்திடம் உடன டியாக வாங்கி கொடுக்க தருமாறு மாமியார் கூறி உள்ளார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோகுல்நாத் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. கோகுல்நாத் மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்கு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.