உள்ளூர் செய்திகள்

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி

Published On 2023-06-23 05:58 GMT   |   Update On 2023-06-23 05:58 GMT
  • குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது.
  • ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

சேலம்:

தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி மேட்டூரில் நடைபெற்றது. சேலம் மண்டல தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசுகையில், இன்றைய நவீன காலத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி வருமானம் சம்பாதிப்பது குழந்தைகளின் பெற்றோருக்கும், வேலை அளிப்பவர்களுக்கும், சமதாயத்துக்கும் நல்லது அல்ல. எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம், வேலைக்கு அல்ல என்ற குறிக்கோளுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்.

குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர் முறை தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல் குறித்து இணை இயக்குனர் (பொறுப்பு) தினகரன், கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் சட்டம் குறித்து உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி, ஆள் கடத்தல் மற்றும் இளம் சிறார் நீதி, சட்டம் குறித்து சேலம் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி, வெளிமாநில தொழிலாளர் சட்டம் குறித்து சுகாதார கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் ஆகியோர் பேசினர்.

இந்த பயிற்சியில் ஓசூர் இணை இயக்குனர் சபீனா, துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 120-க் கும் மேற்பட்ட வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News