உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் பேசிய போது எடுத்தபடம்.

கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தால் குண்டர் சட்டம் பாயும்

Published On 2023-07-31 07:20 GMT   |   Update On 2023-07-31 07:20 GMT
  • ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது.
  • இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்காட்டில் குற்றசெயல்களை தடுக்கும் விதமாக கலந்தாய்வு கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம ஊர் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் பேசியதாவது:- ஏற்காடு மலை கிராமங்களில் கள்ள துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கஞ்சா, கள்ள சாராயம், அரசு மது பாட்டில் விற்பனையாளர்கள் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதாக அவ்வப்போது தகவல் வருகிறது. எங்களது போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வழக்குகளும் செய்து வருகிறார்கள். கள்ளத்துப்பாக்கி வைத்துள்ள நபர்கள் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். கள்ளத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைத்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. நாங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளது கண்டுபிடித்தால் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News