அடுத்த வாரம் 7-ந்தேதி பள்ளிகள் திறப்பு நோட்டு புத்தகங்கள் விலை 10 சதவீதம் வரை உயர்ந்தது
- சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
- இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
சேலம்:
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளி, கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் மாண வர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், கைடுகள் மற்றும் எழுதுப் பொருட்கள், புத்தகப் பை, டிபன் கேரியர்கள் போன்றவை விற்பனையும் களை கட்ட தொடங்கி யுள்ளன.
சேலத்தில் உள்ள ஸ்டேஷ னரி கடைகளில் சிவகாசி, மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நோட்டு புத்தகங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நோட்டு புத்தகங்கள் மட்டு மின்றி உரைநடை (கைடு) புத்தகங்கள் விலையும் உயர்ந்துள்ளது. விலை குறைவாக உள்ள உரைநடை நூல்கள், நோட்டு புத்தகங்களில் உள்ள தாள்களின் தரம் சற்று குறைவாகவே இருப்பதால் பெற்றோர்கள் விலை அதிகம் உள்ள நோட்டு புத்தகங்கள், கைடுகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர்.