உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி திரவுபதி அம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு

Published On 2023-08-31 07:53 GMT   |   Update On 2023-08-31 07:53 GMT
  • வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதிஅம்மன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
  • கோவில்களிலும் மஹா பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

வாழப்பாடி:

வாழப்பாடி அக்ரஹாரம் திரவுபதிஅம்மன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது. மஹா பவுர்ணமி தினத்தையொட்டி உலக நன்மைக்காக நேற்றிரவு நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாட்டில் திரவுபதி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. பட்டாடை உடுத்தி சந்தனம் பூசி மலர்மாலை அலங்காரத்தில் திரவுபதி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தருமராஜர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்கள், கிருஷ்ணபகவான் உள்ளிட்ட மரசிற்ப சுவாமிகளுக்கும், வன்னிமரத்து விநாயகருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன், வாழப்பாடி செல்வமுத்து மாரியம்மன், புதுப்பட்டி மாரியம்மன், அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள் கோவில்களிலும் மஹா பவுர்ணமி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

Tags:    

Similar News