உள்ளூர் செய்திகள்

தலைவர்கள் சிலைகளை இடமாற்றம் செய்ய முடிவு

Published On 2023-06-02 06:46 GMT   |   Update On 2023-06-02 06:46 GMT
  • ஒருங்கி ணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது.
  • இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண் டது.

வாழப்பாடி:

வாழப்பாடியில் பழு டைந்த பேருந்து நிலைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு, கீழ்தளத்தில் பயணி கள் நிழற்குடை, பேருந்து தள மேடை வசதிகளும், மேல் தளத்தில் வணிக வளாகம், சிறு வியாபாரக் கடைகள் மற்றும் நடை மேடையுடன், ஒருங்கி ணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடை பெற்று வந்த பேருந்து நிலைய கட்டுமானப்பணி கள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வாழப்பாடி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயி லில், டாக்டர் அம்பேத்கர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகி யோரது முழு உருவ சிமெண்ட கான்கிரீட் சிலை கள் உள்ளன. தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் தான், நவீன ஈரடுக்கு பேருந்து நிலை யத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள் ளது.

எனவே, இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண் டது. இது குறித்து வாழப்பாடி தாசில்தார் தலைமையில் கடந்த மார்ச் 10–ந்தேதி அமைதிக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், சிலைகளை வேறு இடத்தில் மாற்றுவது குறித்து இது வரை இறுதி முடிவு எடுக்கப் படவில்லை.இதனையடுத்து, வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலை மையில், நேற்று மீண்டும் அனைத்துக்கட்சி நிர்வாகி கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், தேசிய நெடுஞ்சா லைத்துறை, நெடுஞ்சா லைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் த.மா.கா. வி.எம்.சொக்கலிங்கம், அ.தி.மு.க. என்.சிவக்குமார், தி.மு.க. சேட்டு ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முல்லைவாணன், காங்கிரஸ் எம்.கே.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதால் திறப்பு விழா நடத்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டியுள்ளதால், நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி பெற்று, கடலுார் பிரதான சாலையோரத்தில் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்க கட்டடத்திற்கு அருகில், 3 சிலைகளையும் மாற்றி அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News