உள்ளூர் செய்திகள்

வீரகனூரில் அதிகபட்சமாக 20 மில்லி மீட்டர் பதிவு

Published On 2023-05-26 08:03 GMT   |   Update On 2023-05-26 08:03 GMT
  • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
  • ஏற்காட்டில் 17.4 மில்லி மீட்டர், மேட்டூரில் 14.2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 51.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

குறிப்பாக வீரகனூர், ஏற்காடு, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

மழையைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோசண நிலை நிலவியது. ஏற்காட்டில் கோடை விழா நடைபெற்று வருவதால் ஏராளமான சுற்றுலாப் பணிகள் இருந்தனர். அங்கு நேற்று பெய்த சாரல் மலையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஏற்காட்டில் 17.4 மில்லி மீட்டர், மேட்டூரில் 14.2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 51.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Tags:    

Similar News