சேலம் மாவட்டத்தில் இன்று பிளஸ்-1, பிளஸ்-2 செய்முறை தேர்வு தொடங்கியது
- பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதியும் தொடங்குகிறது.
- சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை விடைத்தாளுடன் தைக்கும் பணி நடந்து வருகிறது.
சேலம்:
தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதியும் தொடங்குகிறது.
மாநிலம் முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாணவர்களின் விபரங்கள் அடங்கிய முகப்பு பக்கங்கள், பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவை விடைத்தாளுடன் தைக்கும் பணி நடந்து வருகிறது.
செய்முறை தேர்வு தொடங்கியது
இதனிடையே பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கியது. வருகிற 7-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 325 அரசு பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 16,706 மாணவர்கள், 19,436 மாணவிகள் என மொத்தம் 36,142 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர்.
இதேபோல் 18,830 மாணவர்கள் 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர். இதுதவிர தனித்தேர்வர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆர்வம்
செய்முறை தேர்வில் இம் மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று எழுதினர். பள்ளி ஆய்வகத்தில் மாணவ- மாணவிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட செய்முறையை உடனுக்குடன் ஆய்வு செய்து காட்டினர்.
ஒரு சில பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று, தேர்வு முறையாக நடைபெறுகிறதா?, ஆய்வக கூடத்தில் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், செய்முறை தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு நேரில் சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
அட்டவணை
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், மனையியல், ெதாழிற்கல்வி, உள்ளிட்ட பாடங்களுக்கு தனித்தனி அட்டவணைகளில் மாண வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட நடத்தப்படுகிறது. செய்முறைத் தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் மேற்கொண்டுள்ளனர்.