உள்ளூர் செய்திகள்

சேலத்தில் பகுதி நேர வேலை தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.5 1/2 லட்சம் மோசடி

Published On 2023-09-30 09:47 GMT   |   Update On 2023-09-30 09:47 GMT
  • செல்போனுக்கு இருக்கு கடந்த 18-ந் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வந்துள்ளது.
  • மர்ம நபர் நிபந்தனையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில்களை தந்தால் மீண்டும் அந்த பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கிலேயே வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

சேலம்:

சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் விஜய் (24). இவரது செல்போனுக்கு இருக்கு கடந்த 18-ந் தேதி வந்த குறுந்தகவலில் ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகவும் அதற்கு சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து விஜய் அந்த குறிப்பிட்ட தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அந்த மர்ம நபர் நிபந்தனையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில்களை தந்தால் மீண்டும் அந்த பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கிலேயே வந்துவிடும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய விஜய் ரூ.5 லட்சத்து 71ஆயிரத்து 280 பணத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் செலுத்தியுள்ளார்.ஆனால் அந்த மர்ம நபர் கூறியபடி பணம் மீண்டும் இவரது வங்கி கணக்கில் வராததால் அதிர்ச்சி அடைந்த விஜய் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News