புரட்டாசி விரதம் எதிரொலிகறிக்கோழி விலை 9 ரூபாய் சரிவு
- 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சேலம்:
நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் ஏராளமானோர் விரதம் இருந்து வருகிறார்கள். இதனால் கறிக்கோழி தேவை குறைந்து வருவதால் அதன் விலை படிப்படியாக சரிந்து வருகிறது.
10 நாட்களுக்கு முன்பு கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 114 ரூபாயாக இருந்த நிலையில் படிப்படியாக சரிந்து 5 நாட்களுக்கு முன்பு 106 ரூபாயாக குறைந்தது.
இந்த நிலையில் பல்லடத்தில் இன்று நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையை மேலும் கிலோவுக்கு 9 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 97 ரூபாயாக குறைந்தது.
இனிவரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழி பண்ணை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.