டேக்வாண்டோ போட்டியில் சேலம் மாணவி சாதனை
- அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான டேக்வாண்டோ போட்டியில் சேலம் மாணவி சாதனை படைத்தார்.
- டேக்வாண்டா போட்டியில் வெற்றி பெற்ற சேலம் மாணவி சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.
சேலம்:
கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தில் 2022-23 -ம் ஆண்டிற்கான அகில இந்திய பல்கலைக்கழக டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன.
இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணயத்தின் எம்ஐஎம்எஸ் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் அனுஷியா பிரியதர்ஷினி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் 62 கிலோ எடை பிரிவில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இவர் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகளில் பதக்கம் வெல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.இவர் சேலத்தில் அமைந்துள்ள அத்தீனா டேக்வாண்டோ பயிற்சி மையத்தில் சிறப்பு டேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார்.
மேலும் தென்னிந்தியாவிலிருந்து உலக டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற முதல் பெண் அனுஷியா பிரியதர்ஷினி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் , வருகிற ஜூலை மாதம் சீனா செங்குடுவில் நடைபெறவுள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டியில் இந்தியா சார்பில் விளையாட தேர்ந்தெடுக்கப்–பட்டுள்ளார்.
இவருக்கு இவர் பயிலும் திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரியின் தாளாளர், கல்லூரி இயக்குநர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.