உள்ளூர் செய்திகள்

சங்ககிரியில் சாலை விரிவாக்கப் பணிகளை சேலம் கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்த காட்சி.

ரூ.12 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணி சேலம் கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

Published On 2022-12-30 08:04 GMT   |   Update On 2022-12-30 08:04 GMT
  • சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
  • மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது.

சங்ககிரி:

மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பில், சேலம் மாவட்டம் சங்ககிரில் இருந்து பவானி செல்லும் சாலையில், சாமியார் தோட்டத்தில் இருந்து கவுண்டனுார் வரை, ரூ.5.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப்பணி, தடுப்புச்சுவர் கட்டுதல், வடிகால் கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல், மகுடஞ்சா வடியில் இருந்து இடைப்பாடி வழியாக குமாரபாளையம் வரை ரூ.6.81 கோடி மதிப்பில், இருவழிச் சாலை அகலப்படுத்துதல், மேம்படுத்தும் பணிகளும் நடக்கிறது. மேலும், ஆலத்தூர்ரெட்டி பாளை யத்தில் இருந்து தேவூர் செல்லும் சாலையில் ரூ.71 லட்சத்தில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை நேற்று, நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, சேலம் கண்கா ணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சாலையோரம் இடையூறாக உள்ள மரங்களை உடனே அகற்றி பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, இடைப்பாடி நெடுஞ்சா

லைத்துறை கோட்டப்பொ றியாளர் சண்முகசுந்தரம், சங்ககிரி உதவி கோட்டப்பொறியாளர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News