உள்ளூர் செய்திகள்

சேலம் தளவாய்ப்பட்டி ஸ்ரீ மகா வாராகி அம்மன் மகா கும்பாபிஷேக விழா

Published On 2022-12-10 09:26 GMT   |   Update On 2022-12-10 09:26 GMT
  • சேலம் தளவாய்ப்பட்டி ஸ்ரீ மகா வாராகி அம்மன் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.
  • மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

சேலம்:

சேலம் தளவாய்பட்டி கிராமம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ஸ்ரீ மகா வாராகி அம்மன் புதிய ஆலயம் விநாயகர், பைரவர் பரிவாரத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது.

இக் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு தீர்த்த பாலிகை அழைத்தல், கோபுர பதுமை கண் திறப்புடன் தொடங்கியது.

இன்று மாலை 5 மணிக்கு வாராகி அம்மனுக்கு 3-ம் கால பூஜை, யாகசாலை பூைஜகள், ஹோமம், தத்வார்வசனை பூைஜ, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகின்றன.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நலம் காக்கும் நாயகி அன்னை வாராஹிக்கு 4-ம் கால யாகம் ஆரம்பம், காலை 6.30 மணிக்கு யாகசாலை பூைஜகள், 7 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, கலசம் புறப்படுதல் நிகழ்ச்சிகளும், 7.30 மணிக்கு கோபுர கும்பாபிேஷகம், 7.45 மணிக்கு விநாயகர், பைரவர் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவர் வாராஹி அம்மனுக்கு கும்பாபிேஷகம் பூஜை, தீபாராதனை, தசதானம், தரிசனம், மஹாபிஷேகம், மங்களார்த்தி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தொழில் அதிபர் பிரேம்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News