உள்ளூர் செய்திகள்

சேலம் கிராம நிர்வாக அதிகாரி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

Published On 2023-04-28 09:55 GMT   |   Update On 2023-04-28 09:55 GMT
  • மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.
  • இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டம் மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமார். இவர் அந்த பகுதியில் மணல் கடத்தலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மணல் கடத்திய கும்பலை மடக்கி பிடித்தார்.

இந்த நிலையில் அந்த கும்பல் கிராம நிர்வாக அதிகாரி வினோத்குமாரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளது. இதனால் அச்சமடைந்த வினோத்குமார் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.தனக்கு மிரட்டல் விடுத்த மணல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும் அந்த கும்பலால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் புகார் தெரிவித்தார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் கிராம நிர்வாக அதிகாரிக்கு மணல் கடத்தல் அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News