தம்மம்பட்டியில் இன்று 36 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- சேலம் புறநகர் மாவட்டத்தில் 1000 சிலைகள் மாநகரில் 860 சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
- தம்மம்பட்டியில் மட்டும் 23-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்படும் என்று அறிவிப்பு
சேலம்
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் ச ார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
1860 சிலைகள்
சேலம் புறநகர் மாவட்டத்தில் 1000 சிலைகள் மாநகரில் 860 சிலைகளும் கடந்த 20-ந் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலை களில் கரைக்கப்பட்டது.இதில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மட்டும் 23-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தம்மம்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு தொடர்ந்து சிறப்பு பூைஜகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது.இந்தநிலையில் தம்மம்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 36 விநாயகர் சிலைகளும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை உடையார் பாளையம் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஜங்கமசமுத்திரம் ஏரியில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
450 போலீசார்
இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் சண்முகம் உள்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.இதையொட்டி சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.