உள்ளூர் செய்திகள்

மலையாம்பட்டி கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சமபந்தி விருந்து விழா

Published On 2022-07-28 07:03 GMT   |   Update On 2022-07-28 07:03 GMT
  • ராசிபுரம் அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில் ஆலமரத்தடியில் குடிகொண்டிருக்கும் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடந்து வருகிறது.
  • இந்த திருவிழா வருகிற 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது.

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள மலையாம்பட்டி கிராமத்தில் ஆலமரத்தடியில் குடிகொண்டிருக்கும் மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடந்து வருகிறது. பொங்களாயி அம்மன் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர்.

பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நேர்த்தி கடனாக ஆடுகளை பலியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த திருவிழா வருகிற 31-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடக்கிறது. அப்போது பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய ஆடுகளை பலியிட்டு பொங்கல் வைத்து அம்மனை வழி பட்ட பிறகு விடிய விடிய கறி விருந்து(சமபந்தி விருந்து) பொதுமக்களுக்கு வழங்குவார்கள். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் சேலம்,நாமக்கல், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, ராசிபுரம் உள்பட பல்வேறு கிராமபகுதிகளில் இருந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்பாடுகளை தர்ம கருத்தாக்கள் சுப்பிரமணியம், ஆனந்த், சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News