உள்ளூர் செய்திகள்

சம்பா பயிர்கள் மூழ்கியுள்ளதை வேதனையுடன் காண்பிக்கும் விவசாயிகள்.

வாய்க்கால் தூர்வாராததால் சம்பா பயிர்கள் மூழ்கின- விவசாயிகள் வேதனை

Published On 2022-11-05 08:19 GMT   |   Update On 2022-11-05 08:19 GMT
  • ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா நடவு செய்த விவசாயிகள்.
  • பயிர்களை கணக்கீட்டு செய்து நிவாரண தொகை வழங்க வேண்டும்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு மற்றும் நடவு செய்திருந்த சம்பா பயிர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நாற்றுகள் கடந்து சில தினங்களாக மூழ்கிய நிலையில் நாற்றுகள் உள்ளன.

ரெகுநாதகாவேரி வாய்க்கால் பல வருஷமாக தூர்வாராத காரணத்தால் மழைநீர் வெளியேற வழியின்றி வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவு செய்து நடவு செய்திருந்த சம்பா விவசாயிகள், தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால் நடவு வயல்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி பயிர்கள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலையில் உள்ளதால் சம்பா விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளனர்.

மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு உடனடியாக அரசு உரிய நிவா ரண தொகையை வழங்க உத்திரவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News