மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் சுற்றி திரியும் மிளா
- மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
- கடந்த சில மாதங்களாக மாஞ்சோலை அடுத்த நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிகிறது.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்ட மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. மேலும் இந்த வனப்பகுதியில் காட்டுயானை, சிறுத்தை, மிளா, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளும் வசித்து வருகின்றன.
இந்த பகுதி நெல்லை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்ப குடும்பமாக வருகை தந்து, மாஞ்சோலையின் இயற்கை எழில் மிகுந்த அழகை ரசித்து செல்கின்றனர்.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக மாஞ்சோலை அடுத்த நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியில் மிளா ஒன்று சுற்றி திரிகிறது. அது சுற்றுலா பயணிகள் கொண்டுவரும் தின்பண்டங்களை சாப்பிட்டு செல்கிறது. அவ்வாறு அதற்கு சுற்றுலா பயணிகள் வழங்குவதை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.