அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக வழிபாடு; தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
- 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
- ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரம் நடைபெற்றது.
இதில் 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன.
பின்னர், சிவாச்சாரியார்கள் புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகளுடன் கொடி மரம் மற்றும் கோயிலை வலம் வந்து, அமிர்தகடேஸ்வரருக்கு சங்காபிஷேகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
இதில் தருமபுர ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரம்மச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
இதில் கோவில் குருக்கள்கள் கணேசன், ரவி, மகேஷ், ஆடிட்டர் குருசம்பத், கோவில் கண்காணிப்பாளர் மணி, காசாளர் களியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.