உள்ளூர் செய்திகள்
மாநகர பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் - புதிய நல அலுவலர் தகவல்
- நெல்லை மாநகராட்சியின் புதிய நகர் நல அலுவலராக டாக்டர் சரோஜா இன்று பொறுப்பேற்று கொண்டார்.
- டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்கால சுகாதார நடவடிக்கைகள் மாநகராட்சி பகுதியில் மேம்படுத்தப்படும் என புதிய நல அலுவலர் கூறினார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியின் புதிய நகர் நல அலுவலராக டாக்டர் சரோஜா இன்று பொறுப்பேற்று கொண்டார். இவர் ஏற்கனவே மாநகர நல அலுவலராக நெல்லையில் பணியாற்றியவர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட டாக்டர் சரோஜா மீண்டும் நெல்லை மாநகர நல அலுவலராக நியமிக்கப்பட்டார்.
இன்று பொறுப்பேற்றுக் கொண்ட அவர் நிருபர்களிடம் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சுகாதாரம் தொடர்பான மழைக்கால முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்படும். டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்கால சுகாதார நடவடிக் கைகள் மாநகராட்சி பகுதியில் மேம்படுத்தப்படும் என்றார். முன்னதாக அவர் கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி, மேயர் சரவணன், துணை மேயர் ராஜு ஆகி யோரை சந்தித்து வாழ்த்து பெற்றுக் கொண்டார்.