உள்ளூர் செய்திகள்

புகை மருந்து அடிக்கப்பட்ட காட்சி

மானூர் சுற்றுவட்டாரத்தில் டெங்கு பரவலை தடுக்க சுகாதார பணிகள் தீவிரம்

Published On 2023-02-12 09:11 GMT   |   Update On 2023-02-12 09:11 GMT
  • நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
  • கொசு புழு ஒழிப்பு பணி மற்றும் முதிர் கொசுக்கள் அழிப்பதற்கு புகை மருந்து அடிக்கப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு கிராமங்கள் தோறும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு டெங்கு உள்ளிட்ட கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் வீடு வீடாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டதுணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் ராஜேந்திரன் அறிவுரைப்படி உக்கிரன்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன் தலைமையில் மேல தாழையூத்து, அழகிய பாண்டியபுரம், பட்டவர்த்தி, வெண்கல பொட்டல் மற்றும் வன்னிகோனேந்தல் கிராமங்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர். கொசு புழு ஒழிப்பு பணி மற்றும் முதிர் கொசுக்கள் அழிப்பதற்கு புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த பணியினை மாவட்ட மலேரியா அலுவலர் மஞ்சுளா, மானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பு செய்தனர்்.

Tags:    

Similar News