- பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
- இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
வாழப்பாடி:
தமிழக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை தொடங்கப்பட்டு 100-ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி தமிழகத்தின் அனைத்து சுகாதார மாவட்டங்களிலும் பொது சுகாதாரத் துறை சார்பில் வட்டார அளவில் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி, சேலம் மாவட்டம் ஆத்தூர் சுகா தார மாவட்டம், பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், ஆத்தூர் சுகாதாரப் பணிகள் (பொறுப்பு) துணை இயக்குனர் வித்யா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் மற்றும் மருத்துவ அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, பனை விதைகள் உள்பட 100 மரக்கன்றுகளை சுகாதார நிலைய வளாகத்தில் நட்டு, முறையாக பராமரித்து வளர்ப்பதென உறுதிமொழி ஏற்றனர். இறுதியில் சுகாதார ஆய்வாளர் செல்வபாபு நன்றி கூறினார்.