உள்ளூர் செய்திகள்

நாசரேத் அருகே பரிசுத்த உபகார மாதா ஆலய திருவிழாவில் சப்பர பவனி

Published On 2023-09-28 08:53 GMT   |   Update On 2023-09-28 08:53 GMT
  • திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது.
  • இந்த ஆராதனையில் கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றினார்.

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார மாதா ஆலய திருவிழா கடந்த 18-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது.

திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது.

9-ம் திருவிழா மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை தூத்து க்குடி மறை மாவட்ட குருகுல முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இந்த ஆராதனையில் கள்ளிக்குளம் பனிமய அன்னை மெட்ரிக் பள்ளி முதல்வர் மணி மறையுரை ஆற்றினார்.

இதில் பங்குத்தந்தைகள் ரெமிஜியூஸ், ராபின், இருதயசாமி, கலை செல்வம் மற்றும் இறை மக்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் உருவ சப்பர பவனி நடந்தது.

10-ம் திருவிழாவான நேற்று காலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், காலை 7 மணிக்கு பெருவிழா திருப்பலியும் சாத்தான்குளம் மறை வட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமையில் நடந்தது. தைலாபுரம் பங்குத்தந்தை ததேயுஸ் ராஜன் வரவேற்றார். சோமநாதபேரி பங்குத்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் மறையுரை ஆற்றினார்.

இதில் பங்குத்தந்தைகள் சலேட் ஜெரால்ட், மணி, இருதயசாமி, கலைச்செல்வன், விஜயன் மற்றும் இறைமக்கள் திரளானோர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழங்குதல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு அன்னை மற்றும் புனிதர்களின் உருவ சப்பர பவனியும் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். அன்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனி தென் மண்டல பணிக்குழுக்கள் ஒருங்கி ணைப்பாளர் நெல்சன் பால்ராஜ் தலைமையில் நடந்தது. சவேரியார்புரம் பங்குத்தந்தை ரெமிஜியூஸ் மறையுரை ஆற்றினார். இரவு 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News