உள்ளூர் செய்திகள்

கல்வியை மாணவர்களுக்கு எடுத்து செல்வது என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

கல்வி மேம்பாட்டு கேந்திரத்துடன் சாரதா கல்வியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published On 2022-08-21 09:10 GMT   |   Update On 2022-08-21 09:10 GMT
  • அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியின் உள்தர உறுதி கட்டமைப்பின் சார்பில் தரமான கல்வியை மாணவர்களுக்கு எடுத்து செல்வது என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது
  • ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் , தச்சநல்லூர் மற்றும் சாரதா மகளிர் கல்லூரிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

நெல்லை:

அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியின் உள்தர உறுதி கட்டமைப்பின் சார்பில் தரமான கல்வியை மாணவர்களுக்கு எடுத்து செல்வது என்னும் தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி துணை முதல்வர் கலாவதி வரவேற்றார். செயலர் யதிஷ்வரி சரவணபவபிரியா அம்பா முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் தொடக்க உரை ஆற்றினார். கல்வி மேம்பாட்டு கேந்திரத்தின் தமிழ் மாநில தலைவர் இந்திராணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.

நிகழ்ச்சியின் மையமாக காந்தி கிராம் பல்கலைக்கழகத்தின் லஷ்மி கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர் வின்சென்ட் ராஜசேகர் சிறப்புரையாற்றினார். விழாவின் முக்கிய நிகழ்வாக கல்வி மேம்பாட்டு கேந்திரம் மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரி இடையே முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்த பத்திரத்தை கல்லூரி செயலரிடம் இருந்து சாரதா கல்வியியல் கல்லூரி பேராசிரியர் சாருலதா பெற்றுக்கொண்டார். 2-வதாக ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் , தச்சநல்லூர் மற்றும் சாரதா மகளிர் கல்லூரிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆனந்த் நன்றி கூறினார்.

Tags:    

Similar News