சாத்தான்குளம் தொடக்க கூட்டுறவு சங்கம் மாநிலத்தில் 2-வது இடம் பிடித்து சாதனை
- சங்கம் தற்பொழுது கடன் வழங்குதல், டெபாசிட் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வைத்து சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்படுகிறது.
- தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் சாத்தான்குளம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் சிறப்பாக செயல்பட்டு கடந்த 1990-ம் ஆண்டு முதல் தொடர்ந்து லாபத்தில் இயங்கி வருகிறது. இச்சங்கம் தற்பொழுது கடன் வழங்குதல், டெபாசிட் சேகரித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வைத்து சிறந்த சங்கமாக தேர்வு செய்யப்படுகிறது. மாநில அலுவலக போட்டியில் பெரம்ப லூர் மாவட்டம் முதல் இடத்திலும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை சங்கம் 2-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கான விருது வழங்கும் விழா கோவையில் நடைபெற்றது. அப்போது சாத்தான்குளம் சங்க தலைவர் பொன் முருகேசனிடம் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி கேடயம் மற்றும் பரிசுகளை வழங்கினார். விழாவில் வங்கி செயலர் எட்வின் தேவஆசிர்வாதம், பணியாளர்கள் முருகேசன், வக்கீல் கிருபா, குணசேகர் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சங்க தலைவர் பொன்முருகேசன் தலைமையில் வங்கி செயலர் எட்வின் தேவ ஆசிர்வாதம் உள்ளிட்ட வங்கி அலுவலர்கள் தெற்கு மாவட்ட தி.மு.க செயலரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து கேடயத்தை காண்பித்து பாராட்டு பெற்றனர்.