உள்ளூர் செய்திகள்

மாணவா்களுக்கு நுழைவுத் தோ்வு மூலம் கல்வி உதவித் தொகை

Published On 2022-08-26 10:52 GMT   |   Update On 2022-08-26 10:52 GMT
  • நுழைவுத் தோ்வு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய தோ்வு முகமையின் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயிலும் இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதார நிலையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சாா்ந்த 15 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தோ்வு மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமு றைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2022-2023-ம் கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய தோ்வு முகமையால் நுழைவுத் தோ்வு நடத்தப்பட உள்ளது.

நுழைவுத் தோ்வு தொடா்பான விவரங்களை இணையதளத்தில் மாணவா்கள் அறிந்து கொள்ளலாம். கணினி வழியில் நுழைவுத் தோ்வு நடைபெறும்.

தோ்வு செய்யப்படும் 9, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆண்டிற்கு ரூ.75 ஆயிரம், 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டிற்கு ரூ.1,25,000, பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணங்கள் சோ்த்து கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும், மேலும் மாணவ, மாணவிகளால் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை சரிசெய்து கொள்ள நாளை முதல் 31-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தோ்வுக்கான நுழைவுச்சீட்டு வருகிற 5-ந் தேதி இணைய தளத்தில் வெளியிடப்படும். 11 -ந் தேதியன்று தோ்வு நடைபெறுகிறது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும்போது தொலைபேசி எண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.

மேலும், இத்திட்டம் தொடா்பான அனைத்து விவரங்களும் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News