உள்ளூர் செய்திகள்
- ஆண்டு விழாவிற்கு பள்ளி தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார்.
- வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். பள்ளிச் செயலாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் நம்மாழ்வார் ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் முந்தைய தினம் பல்வேறு போட்டிகள் நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கவிஞர் அருள் பிரகாஷ் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி நிர்வாக அலுவலர் குருநாதன் நன்றி கூறினார். பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.