உள்ளூர் செய்திகள்

உடன்குடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Published On 2023-08-15 08:32 GMT   |   Update On 2023-08-15 08:32 GMT
  • திருச்செந்தூர் வேளாண் துணை இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
  • இக்கண்காட்சி சமுதாயத்தில் திணை உணவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

உடன்குடி:

உடன்குடி சல்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி சயின்ஸ் எக்ஸ்போ-2023 சர்வதேச திணை ஆண்டு என்னும் தலைப்பில் நடந்தது. பள்ளி நிறுவனர் ஹசன் அப்துல் காதர் தேசியக்கொடியேற்றினார். பள்ளி தாளாளர் ரியாசுதீன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லி வரவேற்றார். திருச்செந்தூர் வேளாண் துணை இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். உடன்குடி வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரத்னாவதி கலந்து கொண்டு பேசினார். கண்காட்சியை பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். இக்கண்காட்சி சமுதாயத்தில் திணை உணவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

Tags:    

Similar News