கடையநல்லூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி மசூதைக்கா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு அறிவியல் செய்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர்
கடையநல்லூர்:
கடையநல்லூர் அரசு உதவி பெறும் மசூதைக்கா மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் பல்வேறு கண்டுபிடிப்புகளை செய்து காண்பித்தனர். இதற்கான இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி அரங்குகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் மவுலவி, ஹாபீஸ், ஹஸன் மக்தும் சாஹிபு தலைமை தாங்கினார். நைனா முஹம்மத் பெரிய குத்துபா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் வாஹித் சாஹிப், கடையநல்லூர் நகர மன்ற உறுப்பினர் முகமது அலி, பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் முகமது அனிபா, முகமது அலி, முகமது புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது உசேன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர பாண்டியன் மற்றும் வனவர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு இளம் விஞ்ஞானிகளின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்தனர்.
அப்போது மாணவ- மாணவிகளின் பல்வேறு அரிய வகை கண்டுபிடிப்புகளை பார்த்து பாராட்டினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் செய்யது அன்பியா, பீர் முகமது, அமானுல்லா, அப்துல் காதர், காஜா மைதீன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளும் பல்வேறு அறிவியல் செய்முறை விளக்கத்தை செய்து காண்பித்தனர். அவர்களை இளம் விஞ்ஞானியாக உருவாக்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் முன்னெடுத்து அவர்களின் திறமைகளை ஊக்குவிக்க மசூதைக்க மேல்நிலைப் பள்ளி நிர்வாகம் தயாராக உள்ளதாக பள்ளியின் தாளாளர் ஹசன் மக்தும் தெரிவித்தார்.
மாணவர்கள் நாங்கள் இளம் விஞ்ஞானிகளாக உருவாகுவோம். எங்களுடைய அறிவுத்திறமையை மேம்படுத்தி, எங்களுடைய சிந்தனையை மேம்படுத்தி, நாங்கள் உறுதியாக இளம் விஞ்ஞானிகளாக வளருவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய பெருமக்கள் செய்தனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்ற பொழுது ஏவுகணை, ராக்கெட் உட்பட பல்வேறு அறிவியல் சோதனைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சி இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் சிக்கந்தா ரஹ்மான் நன்றி கூறினார்.