- பூச்சிக்கொல்லி இல்லா கொசு ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
- போட்டியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சுவாமிமலை:
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாளினை முன்னிட்டு எல்.கே.ஜி. வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கும்பகோணம் மாஸ் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சரவணன் கலந்து கொண்டு மாணவ -மாணவிகளின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு வாழ்த்தினை தெரிவித்தார்.
இதையடுத்து அறிவியல் கண்காட்சி போட்டி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 1000 -க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
இக்கண்காட்சியில் நடக்கும் இயந்திர ரோபோ மனிதன், தீயணைப்பு கருவி, நிலநடுக்க எச்சரிக்கை கருவி, கழிவு நீரோடைகளில் பூச்சிக்கொல்லி இல்லா கொசு ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.மேலும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் போட்டியில் பங்கேற்ற தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த அறிவியல் கண்காட்சி போட்டியை பள்ளி தாளாளர் கார்த்தி கேயன் ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் சிறப்புரை யாற்றினார். பள்ளி முதல்வர் அம்பிகாபதி வரவேற்றார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.