உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் கண்காட்சி
- ஹச்.என்.யூ.பி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பு முகாம் நடைபெற்றது.
- அறிவியல் கருவிகள் மற்றும் அறிவியல் செய்முறைகள் குறித்து மற்ற பள்ளிகளில் இருந்து வந்த மாணவ- மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை ஹச்.என்.யூ.பி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பு முகாம் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவரும், பள்ளி தலைவருமான சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி தாளாளர் உதயசூரியன் ,பள்ளி முதல்வர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமில் பள்ளி மாணவர்கள் சார்பாக வைக்கப்பட்டிருந்த அறிவியல் கருவிகள் மற்றும் அறிவியல் செய்முறைகள் குறித்து மற்ற பள்ளிகளில் இருந்து வந்த மாணவ- மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. கண்காட்சியில் நிலக்கோட்டை, நிலக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிராம பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.