அரசு பள்ளியில் குறும்படம் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
- வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
- போக்சோ தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படம் திரையிட்டு, மாணவ, மாணவிகளுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் சிறார்கள் பாலியல் தொந்தரவு தடுக்கும் போக்சோ சட்டம், குழந்தைத் திருமணங்கள் மற்றும் இணைய குற்றங்கள் தடுப்பு குறித்து, பள்ளிகள் தோறும் ஆசிரியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வெங்கடாசலம் வரவேற்றார்.
இதில் வாழப்பாடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலா, தலைமை காவலர் வைரமணி ஆகியோர் போக்சோ தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படம் திரையிட்டு, மாணவ, மாணவிகளுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இக்கருத்தரங்கில், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தற்காப்பு மற்றும் விழிப்புணர்வோடு செயல்படுவதாக உறுதியேற்றனர்.