உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்.

ரூ.30 லட்சம் மதிப்பு கடல் அட்டைகள் பறிமுதல்; இருவர் கைது

Published On 2023-04-05 10:13 GMT   |   Update On 2023-04-05 10:13 GMT
  • 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
  • கடல் அட்டை மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான

போலீசார் நாகை சின்ன தும்பூர் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது அதில் 10 பெட்டிகளில்சுமார் 30 லட்சம் மதிப்பிலான 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் நாகை பாப்பா கோவிலை சேர்ந்த சகோதரர்கள் சிங்காரவேல், கேசவன் ஆகியோர் அக்கரைப்பேட்டையில் இருந்து சரக்கு வாகனத்தில் ராமேஸ்வரத்திற்கு கடல் அட்டைகளை கடத்தி செல்வது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி போலீசார் சிங்காரவேல், கேசவனை கைது செய்து, கடல் அட்டையையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய சில நபர்களை தேடி வருகின்றனர் , தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News