பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க கோரிஎன்.எல்.சி. மருத்துவமனை ஒப்பந்ததொழிலாளர்கள் மீண்டும் உண்ணாவிரதம்
- எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது
- தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்
கடலூர்:
நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் மொத்தம் 44 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.அவர்கள் இன்று காலை என்.எல்.சி. பொதுமருத்துவமனை முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-என்.எல்.சி. நிறுவனம் தற்போது மருத்துவமனையில் பணி செய்வதற்காக நேரடியாக ஆட்களை நியமனம் செய்ய எழுத்து தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எங்களில் படித்தவர்களுக்கு மட்டுமே அழைப்பு கடிதம் வந்துள்ளது. மீதி பேருக்கு வரவில்லை. ஆகவே அதில் எங்களுக்கு முதலில் முன்னுரிமை அளித்து விட்டு அதன் பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்து 4-ந்தேதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.
தொடர் போராட்டம்...அப்போது எங்களிடம் நெய்வேலி டி.எஸ்.பி. ராஜ்குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் நாங்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏவிடமும் நேரில் சென்று இந்த பிரச்னை தொடர்பாக மனு கொடுத்ேதாம். ஆனால் நாங்கள் கொடுத்த மனுவிற்கு இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் நாங்கள் மீண்டும் இன்று காலை மீண்டும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் கொடுத்த மனுவிற்கு நடவடிக்கை எடுக்கும்வரை இந்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.