உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யபட்ட வாகனங்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்.

மணல் கடத்திய சரக்கு வாகனங்கள் பறிமுதல்; ஒருவர் கைது

Published On 2023-09-15 10:32 GMT   |   Update On 2023-09-15 10:32 GMT
  • அனுமதியின்றி மணல் கடத்துவதாக வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 3 சரக்கு வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரக்கத்துக்குட்பட்ட பகுதியில் நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் கடத்துவதாக வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத், காவலர் சிற்றரசு, உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து அனுமதியின்றி 3 சரக்கு வாகனத்தில் மணல் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் விரட்டி சென்று மணல் கடத்தல் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். உடனே அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டி சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் நெய்வேலி வடபாதி ஆவனாண்டி கொள்ளை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாண்டிஸ்வரன் ( வயது 20) என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் 3 சரக்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ரமேஷ், , ராஜஸ்ரீஹரன், வினோத், அறிவழகன், அஜய் ,உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News