உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

Published On 2023-02-28 09:08 GMT   |   Update On 2023-02-28 09:08 GMT
  • சேலம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 14 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 122 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 137 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளது.
  • இந்த வாகனங்களை வருகிற 4- ந் தேதி காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம்.

அன்னதானப்பட்டி:

சேலம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 14 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 122 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 137 வாகனங்கள் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், வருகிற 7- ந் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. இந்த வாகனங்களை வருகிற 4- ந் தேதி காலை 10 மணி முதல் நேரில் பார்வையிடலாம். ஏலம் எடுப்பவர்கள் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.5000, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 முன் பணம் கட்ட வேண்டும்.

வருகிற 5- ந் தேதி காலை 10 மணி முதல் 6- ந் தேதி மாலை 5 மணிக்குள் ஆயுதப்படை மைதானத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News