கடலூர் மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்பனை செய்த சிறுவன் உள்பட 22 பேர் கைது
- தடைசெய்யப்பட்ட குட்கா, போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- 1 கிலோ 175 கிராம் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்கள் சம்பந்தமாக கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் 13- ந் தேதி கஞ்சா, லாட்டரி தடைசெய்யப்பட்ட குட்கா, போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபட்ட 22 குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கஞ்சா விற்பனை செய்த திருப்பாதிரிப்புலியூர் சஞ்சய் (வயது 21) நெய்வேலி அஜய் (26) , பண்ருட்டி தமிழரசன் (21), நடுவீரப்பட்டு 17 வயது சிறுவன், ஏழுமலை (32), சேத்தியாத்தோப்பு தனலட்சுமி, ஸ்ரீமுஷ்ணம் வல்லரசு ஆகிய 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, 480 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து லாட்டரி விற்பனை செய்த பாலாஜி (31), அருண்குமார் (31) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் குட்கா விற்பனை செய்த கடலூர் ஜெயபிரகாஷ் (55), புதுச்சத்திரம் பச்சையம்மாள் (70), மந்தாரக்குப்பம் கோபாலகிருஷ்ணன் (42), ஸ்ரீமுஷ்ணம் குமரவேல்(46). பாரதிராஜா(27), சோழதரம் ராஜசேகர்(52). நெல்லிக்குப்பம் செந்தில்நாதன் (40), ஆவினங்குடி மோகன் (64), ராமநத்தம் வெங்கடேசன்(50), வேப்பூர் செல்வராஜ் (48). மணிவேல் (40), சிறுபாக்கம் பழனியப்பன் (55), திட்டக்குடி தமிழ்செல்வன் (55), ஆகிய 13 நபர்கள் மீது வழக்குபதிவு செய்து, இவர்களிடமிருந்து 1 கிலோ 175 கிராம் குட்கா பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.