உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் மற்றும் கைதானவர்கள்.

டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே மதுபாட்டில்கள் விற்பனை- 3 பேர் கைது

Published On 2022-08-02 10:05 GMT   |   Update On 2022-08-02 10:05 GMT
  • ஒரு சில இடங்களில் பெட்டிக்கடைகளில் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் சென்றது.
  • மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட பட்டுக்கோட்டையில் 3 இடங்களில் 700 மதுபாட்டில்களும், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கும் முன்பாகவும், கடைகள் மூடிய பின்னரும் மதுப்பாட்டில்களை பார்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதே போல் ஒரு சில இடங்களில் பெட்டிக்கடைகளில் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் சென்றது.இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், தலைமை காவலர்கள் உமாசங்கர், ராஜேஷ், காவலர்கள் அருள்மொழிவர்மன், அழகுசுந்தரம், நவீன் ஆகியோர், பட்டுக்கோ ட்டையில் டாஸ்மாக் பார்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் முன்பே பார்கள் திறந்து அதில் மதுப்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்ட பட்டுக்கோட்டையில் 3 இடங்களில் 700 மதுபாட்டில்களும், ரூ.20 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பட்டு க்கோட்டை ஆலடி க்குமுளையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 50), முதல்சேரி பாலுசாமி (47), ஒரத்தநாடு ரமேஷ் (46) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News