தஞ்சை உழவர் சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை
- பொதுமக்களின் நலன்கருதி குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது
- பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம்.
தஞ்சாவூர்:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது . இந்நிலையில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படியும் , தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலின் படியும் தஞ்சாவூர் உழவர் சந்தையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக செயல்பட்டுவரும் டான்ஹோடா விற்பனை நிலையத்தில் பொதுமக்களின் நலன்கருதி குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது . இங்கு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் தினசரி டான்ஹோடா விற்பனை நிலையத்தை அணுகி இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறும்படி கேட்டுக்கொ ள்ளப்பட்டனர்.இந்நிகழ்ச்சி யில் தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட்ராமன் , தோட்டக்க லை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி , தோட்டக்கலை உதவி அலுவலர் வெங்கடாசலபதி ,வேளாண்மை உதவி அலுவலர் அமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.