செல்வமகள் அஞ்சலக சேமிப்பு திட்டம் தொடக்கம்
- 1 முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு.
- சேமிப்பு பழக்கம் சிறுவயதிலேயே உருவாகும்.
கும்பகோணம்:
உலக சிக்கன நாளையொட்டி திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கஞ்சனூர், கோட்டூர், மணக்குடி, துகிலி திருக்கோடிகாவல் உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளில் உள்ள 1 முதல் 10 வயது உள்ள பெண் குழந்தைகளுக்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் தனது சொந்த நிதியில் முதல் தவணையை செலுத்தி செல்வமகள் திட்டத்தின் கீழ் அஞ்சலக சேமிப்பு கணக்கை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசும்போது:-
1 முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கபட்டுள்ளது. இதன் மூலம் சேமிப்பு பழக்கம் சிறுவயதிலேயே உருவாகும் என்றார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் அண்ணாதுரை, அஞ்சலக கண்காணிப்பாளர் கும்பசாமி, துணைச் செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் சுமதிகுமார், மோகன், ரேவதி பாண்டியன், செல்வராஜ், கரும்பு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பாலகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய குழு உறுப்பினர் தங்கராசு நன்றி கூறினார்.