கீழநத்தம் பஞ்சாயத்தில் குழந்தை வளர்ப்பு குறித்த கருத்தரங்கு
- புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் கே.டி.சி. நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
- மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா குழந்தைகள் வளர்ப்பு பற்றி எடுத்துக் கூறினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் புதுமண தம்பதிகளுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் பாளையை அடுத்த கீழநத்தம் ஊராட்சி கே.டி.சி. நகர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவி முருகன் குத்து விளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் இந்திரா முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் மனித வள மேம்பாட்டு பயிற்சியாளர் இசக்கி முத்தையா கலந்துகொண்டு குழந்தைகள் வளர்ப்பு பற்றி புதுமண தம்பதிகளிடம் எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் பாளை குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெனிபா, வட்டார சுகாதார ஆய்வாளர் முத்துசாமி, அங்கன்வாடி சீதாலட்சுமி, மக்கள் நல பணியாளர் மாரியம்மாள், பணி தள பொறுப்பாளர் சோபனா, வார்டு உறுப்பினர் சுரேஷ் மற்றும் அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கருத்தரங்கில் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.