கோவை வடவள்ளியில் தொடர் திருட்டு-கடைகள் முன்பு கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும்
- 20-க்கும் மேற்பட்ட மளிகைக்கடை மற்றும் பேன்சி கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அனைத்து மளிகைக்கடைகளிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்த வேண்டும், எளிதாக திறக்கும் பூட்டை கடைக்கு போட வேண்டாம்.
வடவள்ளி
கோவை வடவள்ளி பகுதியில் கடந்த சில தினங்களாக 20-க்கும் மேற்பட்ட மளிகைக்கடை மற்றும் பேன்சி கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வடவள்ளி வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு கூட்டம் நடத்த போலீசார் கேட்டுக்கொண்டனர்.
அதை தொடர்ந்து இன்று தமிழக வியாபாரிகள் சம்மேளனம் கோவை மாவட்ட தலைவர் எஸ்.எம்.முருகன் அறிவுத்தலின் படி வடவள்ளி கிளை அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் அனைத்து மளிகைக்கடைகளிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்த வேண்டும், எளிதாக திறக்கும் பூட்டை கடைக்கு போட வேண்டாம், கடையின் முன்பு வெளிச்சம் அதிகமாக இருக்க விளக்கும் பொருத்த வேண்டும். சந்தேகம்படும் படி வெளியாட்கள் நடமாட்டம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தரவேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைக்க வேண்டாம் , மீறும் பட்சத்தில் கடைக்கு சீல் வைத்து கடையின் உரிமை நிராகரி க்கப்படும் என்று வடவள்ளி போலீஸ் சப்-இன்ஸ்செ பெக்டர்கள் செந்தில்கு மார், முத்துகிருஷ்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் வடவள்ளி கிளை தலைவர் சுந்தரபாண்டியன், பொருளாளர் ஒய்.எ.ஜி.சேகர் உள்ளிட்ட சங்க வியாபாரிகள் கலந்து கொண்டனர்.