உள்ளூர் செய்திகள்

சீயோன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

சேத்தியாத்தோப்பு பூதங்குடி - எஸ்.டி.சீயோன். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Published On 2022-06-22 09:12 GMT   |   Update On 2022-06-22 09:12 GMT
  • சேத்தியாத்தோப்பு பூதங்குடி - எஸ்.டி.சீயோன். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்
  • சாதனை படைத்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கேக் வெட்டி பாராட்டினார்.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பூதங்குடி எஸ்.டி.சீயோன். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கேக் வெட்டி பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகி சுஜியின் தலைமை தாங்கினார் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜின் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆண்டனி வரவேற்பு நிகழ்ச்சியில் பிளஸ்- 2 தேர்வில் முதலிடம் பெற்ற இளம்பாரதி 587 மதிப்பெண்ணும்2-வது இடம்பெற்ற மாணவிகள் அனுஷியா .அஸ்வினி 578 மதிப்பெண்களும், 3-வது இடம் பிடித்த கிருத்திகா 575 மதிப்பெண்களும் பெற்றனர்.

அதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் நர்மதா 481 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், சாருமதி 477 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும் கதிர்நிலவன் 467 மதிப்பெண் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

சாதனை படைத்த மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் கேக் வெட்டி பாராட்டினார்.

இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்விற்கு 99.75 சதவீதம் . வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்100-க்கு 100 பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News