உள்ளூர் செய்திகள்

வழக்கில் தீர்வு காணப்பட்டவருக்கான ஆணை வழங்கப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 261 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-08-14 10:00 GMT   |   Update On 2023-08-14 10:00 GMT
  • 2-வது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
  • மொத்தம் 2013 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு, 261 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காகத் தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஜெசிந்தா மாா்ட்டின் தலைமை வகித்தாா்.

இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி மலா்விழி, குற்றவியல் நீதித்துறை நடுவா் இளவரசி, வழக்குரைஞா் வித்யா ஆகியோா் கொண்ட முதலாவது அமா்வில் உரிமையியல், குற்றவியல், குடும்ப நல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

முதன்மை சாா்பு நீதிபதி நாகராஜன், குற்றவியல் நீதித் துறை நடுவா் (விரைவு நீதிமன்றம்) முருகேசன், வழக்குரைஞா் தம்பிதுரை ஆகியோா் கொண்ட இரண்டாவது அமா்வில் மோட்டாா் வாகன விபத்து வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இவற்றுடன் கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு ஆகிய வட்டச் சட்டப் பணிகள் குழுவின் அமா்வுகளிலும் விசாரணை நடத்தப்பட்டது. இவற்றின் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 2013 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 261 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, ரூ. 5 கோடியே 72 லட்சத்து 65 ஆயிரத்து 781 அளவுக்கு இழப்பீடு மற்றும் தீா்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, ஆணைக் குழு நிா்வாக அலுவலா் சந்தோஷ்குமாா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News