கால்வாய் சரியாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்
- கழிவு நீர் கால்வாய் சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஒரமாக அமைத்தனர்.
- சாலையில் செல்வோர்கள், வாகன ஒட்டிகள் மிகுந்த அவதிபட்டு வந்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுவட்டாரத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட சூளகிரி-கும்பளம் சாலையில் பகுதியில் கழிவு நீர் கால்வாய் சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஒரமாக அமைத்தனர்.
ஆனால் சிறிய தூரம் மட்டுமே அமைத்து விட்டு சென்றனர். சில இடங்களில் கால்வாய் சரியாக அமைக்கப்படவில்லை. அதனால் கழிவு நீர், மழை நீர் சாலையிலேயே பெருக்கெடுத்து செல்வதால் சாலை ஓர குடியிருப்புகள் வீட்டின் முன்பும், பின்பும் தேங்கி நிற்கிறது.
இதனால் துர்நாற்றம் வீசி நோய் பரவு அபாயம் உள்ளது. பல சில ஆண்டுகளாக கொசு தொல்லையிலும் மற்றும் தற்போது தொடர் மழையால் அதிக அளவு மழை நீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி வரதன், பொதுமக்கள் முருகேசன், ராமனன், மற்றும் பலர் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்று அலுவலர் விமல் ரவிக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து நேற்று உடனே நடவடிக்கை மேற்கொண்டு மதியம் சம்பவ இடத்தை சூளகிரி வட்டரவளர்சி அலுவலர் விமல் ரவிக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் டென்சிங் ஆகியோர் பார்வையிட்டு பொதுமக்களிடம் கூறுகையில் நெடுஞ்சாலைதுறை அதிகாரியிடம் பேசி புதிய கால்வாய் அமைத்து கழிவு நீர் சீராக செல்ல வழி வகுக்க உள்ளதாக கூறினர்.