உள்ளூர் செய்திகள்

பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் ஷர்வன் குமார் வெளியிட்டார்.

கள்ளக்குறிச்சியில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி: மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் திறந்து வைத்தார்

Published On 2022-08-03 07:03 GMT   |   Update On 2022-08-03 07:03 GMT
  • கள்ளக்குறிச்சியில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார் பெட்டி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  • விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பணியிடங் களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை யின் சார்பாக அமைக்கப் பட்டுள்ள புகார் பெட்டியை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் திறந்து வைத்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவல கங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தின்கீழ் செயல்படும் வட்டார அளவி லான அலுவலகங்கள், தொழிற்சாலைகள், ஆலைகள், நிறுவனங்கள், சிறு மற்றும் பெரிய கடைகளில் (10 பணியாளர்களுக்கு குறையாமல் பணிபுரியும் அனைத்து இடங்களிலும்) பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு அலுவலக உட்புகார் குழு அமைத்திட வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் பணிபுரி யும் பெண் பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாலியல் புகார் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில் வரும் புகார்களை கையாள தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உட்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பாலியல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அலுவலக பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News