நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் வரிகளை 15 நாளில் செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்: ஆணையாளர் எச்சரிக்கை
- குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது.
- கடைகாரர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் நகராட்சி ஆணையாளர் பார்த்த சாரதி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லிக்குப்பம் நகராட்சி க்குட்பட்ட 30 வார்டுகளுக்கும் சாலைவசதி, கால்வாய் வசதி, குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியுள்ளது. மின்சார வாரியத்திற்கு மின் கட்டணம் 0.75 லட்சம் பாக்கி உள்ளது. இந்நிலையில் வரிவிதிப்புதாரர்கள் செலுத்த வேண்டியது. சொத்துவரி நிலுவை- ரூ. 206.34 லட்சம், குழாய் கட்டணம் நிலுவை-ரூ. 37.18 லட்சம், காலிமனை வரி நிலுவை-ரூ. 41.93 லட்சம், தொழில்வரி நிலுவை-ரூ. 13.53 லட்சம், கடை வாடகை நிலுவை- ரூ. 13.22 லட்சம், எஸ்.யூ.சி. கட்டணம்-ரூ. 21.61 லட்சம், மொத்தம்-ரூ. 333.81. எனவே, மேற்படி ரூ.333.81 லட்சம் வரி மற்றும் குழாய், வரியில்லா இனங்களை 15 தினங்களுக்குள் செலுத்த வேண்டும் தவறி னால் விதிகளின்படி ஜப்தி, குழாய் இணைப்பு துண்டிப்பு, கடையை பூட்டி சீல் வைப்பு நடவ டிக்கை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும்.
அனுமதியற்ற குழாய் இணைப்புகளுக்கு தாமாக முன்வந்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தி ஒழுங்குபடுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், ஆலை ரோட்டில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதால் கடை காரர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை ஏழு நாட்களுக்குள் அகற்றி கொள்ள வேண்டும். தவறினால் நகராட்சி சார்பில் ஆக்கிரமி ப்புகளை அகற்ற நேரிடும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. சொத்துவரி குறைக்க வேண்டுபவர்கள் நகராட்சி விதிகளின்படி 2022-2023 முதல் அரையாண்டுக்கான தொகை முழுவதும் செலுத்தி ஆணையருக்கு விண்ணப்பிக்கும் படியும் கோரப்படுகிறது. பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.